பிச்சாடனரை….
பல்லவி
பிச்சாடனரை பலிதேர் பிரானை
இச்சையுடன் பணிந்து எனக்கருள வேண்டினேன்
அனுபல்லவி
நச்சரவணிந்த நமச்சிவாயனை
நச்சரவணை துயிலும் கேசவன் நேசனை
சரணம்
பிச்சியென்றும் பேயனென்றும் துச்சமாய்ப் பேசிய
இச்சகத்து முனிவர்களை தன் பின்னே அலைய விட்ட
கச்சி ஏகம்பனை கருணாமூர்த்தியை
நச்சினார்க்கினியனை நான்மறைப் பொருளை
உடுக்கை மான் மழு சூலம் மற்றும்
வேள்வித்தீயைக் கரங்களிலேந்தி
புலித்தோல் போர்த்தி கணங்கள் சூழ
பாம்பையணிந்து முயலகன் மேல் நிற்கும்
No comments:
Post a Comment