பித்தனென்றாலென்ன….
பல்லவி
பித்தனென்றாலென்ன பேயனென்றாலென்ன
அத்தனே நானுந்தன் மலர்த்தாள் மறவேன்
அனுபல்லவி
எத்தனை இடர் வரினும் கேசவன் நேசனே
நித்தமுனைத்துதித்துன் நாமமே போற்றினேன்
சரணம்
வித்தகனே தத்துவப் பொருளே விடைபாகா
உத்தமி மலைமகள் உடனிருந்து போற்றும்
சத்திய நாதனே சதா சிவனே
உத்தமனே உலகமனைத்தும் நீயே
No comments:
Post a Comment