Thursday, 31 March 2022

மதனுக்கருள்

 


आक्रन्दितं रुदितमाहतमानने वा
कस्यार्द्रमस्तु हृदयं किमतः फलं वा ।
यस्या मनो द्रवति या जगतां स्वतन्त्रा
तस्यास्तवाम्ब पुरतः कथयामि खेदम् ॥ ३ 


ஆனந்த₃ஸாக₃ரஸ்தவம்ஸ்லோகம் - 3

ஆக்ரந்தி₃தம்ʼ ருதி₃தமாஹதமானனே வா

கஸ்யார்த்₃ரமஸ்து ஹ்ருʼத₃யம்ʼ கிமத꞉ ப₂லம்ʼ வா .

யஸ்யா மனோ த்₃ரவதி யா ஜக₃தாம்ʼ ஸ்வதந்த்ரா

தஸ்யாஸ்தவாம்ப₃ புரத꞉ கத₂யாமி கே₂த₃ம் .. 3 ..

கதறினேன், அழுதேன், முகத்திலும் அடித்துக்கொண்டேன் என்றாலும் எவனுடைய மனம் தயையால் இளகும்?  இளகினாலும் அப்படி என்ன பலன் கிடைக்கப்போகிறது? தாயே எவளுடைய மனம் உருகுமோ எவள் ஜீவராசிகள் விஷயத்தில் எதையும் இஷ்டப்படி நடத்தக்கூடியவளோ அப்பேர்பட்ட உன் முன்னிலையில் என் துக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(கருத்துரை)  என் துக்கத்தை பிறர் யாரிடம் சொல்லிக்கொள்வது? யார் கேட்டு இரங்கப்போகிறார்கள்? அப்படி யாராவது இறங்கினாலும் அவர்களால் என் துக்கத்தை நிவர்த்தி செய்ய எப்படி முடியும்? தாயே, சகல ஜீவர்களையும் உன் இஷ்டப்படி நடத்த சக்தியுள்ள உன் முன் என் பரிதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதைத் தவிர வேறு எனக்கு வழி என்ன இருக்கிறது.?

If I were to cry myself hoarse, lament piteously or slap my mouth in despair in front of another, will that another melt with pity for me? And even if he does, can he help me anyway? I therefore wish to give vent to my sorrow in your presence as you rule the world and are apt to be moved to compassion.    


                                               மதனுக்கருள்……


                                                   பல்லவி

                                  மதனுக்கருள் செய்த மாதரசே மீனாக்ஷி

                                  பதம் பணிந்தேனுனது பாதமே கதியென

                                                அனுபல்லவி

                                  இதம் தந்தென் துயர் போக்க நீயேயெந்தன் துணை

                                  நிதமுனையே துதித்தேன் கேசவன் சோதரி         

                                                     சரணம்                                                                                         

                                 கதறியழுதாலும் முகத்திலடித்துக் கொண்டாலும்     

                                 எதிரிலுள்ளோரெனக்கு ஆறுதல் தர இயலுமோ

                                 பதறியவரிரக்கமுடன் பரிந்து வந்தாலும்

                                 உதவியென் துயரைப் பங்கிட முடியுமோ        

                                

                                

No comments:

Post a Comment