🌸தேவியின் திவ்ய ரூபம்.🌸
“ த்வயா ஹ்ருத்வா வாமம் வபு ரபரித்ருப்தேந மநஸா
ஶரீரார்த்தம் ஶம்போ ரபரமபி ஶங்கே ஹ்ருதம்பூத் /
யதேதத் த்வத்ரூபம் ஸகல மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் . //. கருத்து -
தாயே , என் மனதில் உள்ள உன் உருவம், சிவந்த திருமேனியாகவும், மூன்று கண்களையுடையவளாகவும்,
இருண்டு மாணிக்க குடுவைப் போன்ற மார்பகங்களால்,சிறிதே குனிந்ததாகவும், சந்திரக்கலையை ( பிறைச் சந்திரனை) உன் தலையில் சூடியவளாகவும், இருப்பதால்
“நீ” பரமசிவனுடைய இடது பாகத்தை அபகரித்துக் கொண்டு, திருப்தியடையாமல் , மற்றொரு பாகத்தையும்,
எடுத்துக் கொண்டுவிட்டாயோ, என்று தோன்றுகிறது.
( இந்த ஸ்லோகத்தில் -சக்தியில் சிவனடங்கியுள்ளது
என்ற தத்துவத்தை பகவத்பாதர் கூறுகிறார். குறிப்பு - லலிதா ஸஹஸ்ரநாமம் -
நாமாவளி-53- சிவாயை நம:
நாமாவளி-406- சிவாராத்யாயை நம:
நாமாவளி-407- சிவமூர்த்யை நம:
நாமாவளி -408- சிவங்கர்யை நம: .
என்று போற்றுகின்றது . தொகுப்பாசிரியர் சந்தானம் மாம்பலம்.
त्वया हृत्वा वामं वपुरपरितृप्तेन मनसा
शरीरार्धं शम्भोरपरमपि शङ्के हृतमभूत्।
यदेतत्त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं
कुचाभ्यामानम्रं कुटिलशशिचूडालमकुटम्
புவனம் போற்றும்…..
பல்லவி
புவனம் போற்றும் திரிபுரசுந்தரியே
உவகையுடனுந்தன் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
கவிழ்ந்த பிறையணிந்த மகுடம் தரித்தவளே
நவநீதக்கண்ணன் கேசவன் சோதரியே
சரணம்
சிவந்த திருமேனியும் மூன்று கண்களும்
உவந்து ஏற்று வளைந்த தனங்களுடன்
சிவனிடம் கொண்டது போதாதென்றே
அவன் பாகமுமபகரித்துக் கொண்டாயோ
No comments:
Post a Comment