#ஆன்மீகம்
கவலைகளை தீர்த்திடும் மயிலை வளர் ஶ்ரீ கற்பகாம்பிகையே
காருண்ய விழியால் கடைக்கண் பார்த்திடுவாய் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷியே
கிளியை கையில் ஏந்தி அடியார்களுக்கு அருளிடும் அன்னை ஸ்ரீ மீனாக்ஷியே
கீர்த்தியை அள்ளி பொழிந்து ஆனந்தம் அளித்து வாழ வைத்தாய் அன்னை ஸ்ரீ அபிராமியே
குறைவற்ற செல்வங்களை தந்து இன்ப வாழ்க்கை தந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மியே
கூடி நின்று மெய்யன்பர்களோடு உனை தரிசிப்போம் ஸ்ரீ கூடாரவல்லியே
கெட்டியாக உன் கமலபாதங்களை பிடித்திடுவேன் ஶ்ரீ மாதா லலிதாம்பிகையே
கேட்டு நிற்கிறேன் உன் பாதங்களில் சேர்த்து கொள்வாய் ஸ்ரீ திரிபுரஸுந்தரியே
கை நிறைய மலர்கள் எடுத்து உனக்கு மலராபிஷேகம் செய்திடுவேன் ஸ்ரீ காமாக்ஷியே கொடும் உபாதைகளை தரும் தேக வலிகளை போக்கிடுவாய் ஸ்ரீ பாலாம்பிகையே கோடி நன்றிகளை சொன்னாலும் போதாது உன் அருளுக்கு ஈடாக ஸ்ரீ கோடீஸ்வரியே கௌரவமாக பலரும் போற்றும்படி எனை வாழ வைத்தாய் சுக்ல பக்ஷ சுக்ரவாரத்தில் பலவகை மணமிக்க புஷ்பங்களால் பூஜித்து போற்றி வணங்குகிறேன்மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி, லலிதாம்பிகை, என பல பெயர் கொண்ட என் அன்னையே
அனைத்தும் நீயே…..
பல்லவி
அனைத்தும் நீயே ஶ்ரீ லலிதாம்பிகையே
உனையே துதித்தேன் திரிபுரசுந்தரி
அனுபல்லவி
வினைப் பயன் களைந்தெனையாண்டருள்வாயே
நினைப்பவர்க்கருள் தரும் கேசவன் சோதரி
சரணம்
மயிலை வளர் ஶ்ரீ கற்பகாம்பிகே என்
மனக்கவலை போக்கிடவே நீ வருவாயே
கையில் கிளியேந்தும் மீனாக்ஷி தாயே
மெய்யடியார்க்கருள் தரும் அங்கயற்கண்ணியே
ஆனந்தம் கீர்த்தி நல்வாழ்வெனக்களிக்கும்
வான் புகழ் கொண்டவளே அபிராமவல்லியே
தேனே திருமகளே நிறைபொருள் தருமுனையே
கானம் பாடிக்கூடித் துதிப்போம் கூடாரவல்லி
மலர் தூவி உனையே துதித்தேன் காமாக்ஷி
வலிகளைப் போக்கிடுவாய் ஶ்ரீ பாலாம்பிகையே
பல கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது
பலர் போற்ற வாழ வைத்த கோடீச்வரித் தாயே
வளர் பிறையில் வெள்ளியன்று உளமாரத் துதித்தேன்
வளமுடன் வாழவைப்பாய் ராஜ ராஜேச்வரியே
விளையாடல் பலபுரியும் சிவசக்தி நீயே
காமாக்ஷி மீனாக்ஷி காசி விசாலாக்ஷி
No comments:
Post a Comment