எவரிடம்….
பல்லவி
எவரிடம் முறையிடுவேன் ஐயனே
கவலையென்று வந்த எனை நீயே தள்ளினால்
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசனே
சிவகாமி மனங்கவர் மாசிலா ஈசனே
சரணம்
அவனியோர்க்கருள அபயகரம் நீட்டும்
சிவபெருமானே மறை போற்றும் இறைவனே
உவகையுடனமரர் நலம் காக்க வேண்டி
ஆலகாலமுண்ட நீலகண்டனே
No comments:
Post a Comment