பூச்சொரிதல் ஸ்பெஷல் ! சமயபுரத்து நாயகியே சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!
ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
பூரணியே……
பல்லவி
பூரணியே உனை அனுதினம் துதித்தேன்
ஆரணப்பொருளே அருள் புரிவாய் — அன்ன
துரிதம்
காலபயங்கரி காமாக்ஷி மீனாக்ஷி
சூலினி மாலினி சங்கரி கௌரி
காளி கல்யாணி நீலி மகேச்வரி
நிரந்தரி துரந்தரி திரிபுர சுந்தரி
அனுபல்லவி
தாரணியே தர்ம ரூபிணியே தாயே
நாரணியே கேசவன் சோதரியே — பவ
சரணம்
காரணி நீயே அகிலமனைத்திற்கும்
ஊரணி நீராய்ச் சுரக்குமுன்னருள்
வாரிதி எனக்குமளித்திட வேண்டினேன்
பாரினிலனைவரும் கோரிடும் தெய்வமே
No comments:
Post a Comment