ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
ஆசிரியர் வித்துவான் கனகசபைத்தம்பிரான்.
தேசம் பரந்த பெருங் கீர்த்திச் செல்விவருக தியாகேசர்
தேவிவருக வெமை யாண்ட செம்பொற் சிலம்பின் மகள்வருக
பாசம் பரிக்கும் தீயோர்க்கும் பாசம் பரிக்கும் தாய்வருக
பரவுமடியா ருள்ளகத்துப் பரவுங் கருணைத் தேன் வருக
நேசம் பரந்த வொற்றி நகர் நிமலைவருக வானந்த
நிலையம் வருக வுலவாத நிதியம் வருக கற்பகப்பூ
வாசம் பரந்த குழற்கற்றை வடிவாள் வருக வருகவே
வைய முழுது முய்யவரு மாதேவருக வருகவே.
ஆதிபுரி நாயகியை…..
பல்லவி
ஆதிபுரி நாயகியை வடிவுடையம்மனை
பாதம் பணிந்து வருகவென வரவேற்றேன்
அனுபல்லவி
பாதி மதியணிந்த கேசவன் சோதரியை
சோதி வடிவான தியாகேசர் பங்கிலுறை
சரணம்
மேதினியோர் போற்றும் கீர்த்தி மிகு செல்வியை
தீதிலா செம்பொற் சிலம்பின் மகளை
தீயோர்க்குத் தீயை வைக்கும் பாசமிகு தாயை
பரவுமடியரகத்துள் பரவும் கருணைக் கடலை
நேசம் தரும் ஒற்றியூர் நிமலையை அம்பிகையை
தேசுடைய ஈச்வரியை வான் புகழ் கற்பகப்பூ
வாசமுள்ள குழலாளை வருக வருக
வருகவென உபசரித்து வையகமுய்யவே
No comments:
Post a Comment