மதுரமொழியாளே….
பல்லவி
மதுரமொழியாளே மதுராபுரி ராணி
குதுகலத்துடனே உனையே துதித்தேன்
அனுபல்லவி
பதுமநாபன் கேசவன் சோதரி
சதுர் மறைகள் போற்றும் பர்வதகுமாரி
சரணம்
சதுர் புஜன் சரவணன் பணிந்திடுமன்னையே
சதுர்முகனிந்திரன் தேவர்கள் முனிவர்கள்
புது மலர் தூவி வணங்கிடுமீச்வரி
பதும பதம் பணிந்தேன் ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment