பங்கய நாபன்…..
பல்லவி
பங்கய நாபன் கேசவன் சோதரியே
சங்கரி எனையே காத்தருள்வாயே
அனுபல்லவி
பொங்கரவணிந்த சங்கரன் பங்கிலுறை
அங்கயற்கண்ணியே திங்களணிந்தவளே
சரணம்
அங்குசம் பாசம் கைகளிலேந்திடும்
மங்களாம்பிகையே மகிடனை மாய்த்தவளே
சிங்கவாகனம் தனில் வீற்றிருப்பவளே
எங்கும் நிறைந்திருக்கும் அகிலாண்டேச்வரியே
மத்திம காலம்
அங்கி குபேரன் நரர்சுரர் நாரதர்
நரபதி சுரபதி ரதிபதி பசுபதி
சரச்வதியின் பதி தேவசேனாபதி
ஶ்ரீபதி அனைவரும் கரம் பணந்தேத்தும்
No comments:
Post a Comment