தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
தானென்று அவனென்று
இரண்டும் தனில் கண்டு
தானென்ற பூவை அவனடி சாத்தினால்
நானென் றவனென்கை
நல்ல தொன்றன்றே
#தக்ஷிணாமூர்த்தி. #களக்காட்டூர்
யானென்றும்……
பல்லவி
யானென்றுமெனதென்றுமெதுவுமில்லை
அவனன்றி இவ்வுலகில் வேறொன்றுமில்லை
அனுபல்லவி
வான் புகழ் திகழுமவன் கேசவன் நேசன்
மான் மழுவும் பிறையும் ஏந்திய ஈசனன்றி
சரணம்
ஊனுயிரும் தந்தவன் உலகனைத்தும் காப்பவன்
வானாகி மண்ணாகி வளி ஒளியாயிருப்பவன்
தானென்னும் மலர் தூவி அவனடி பணிவோர்க்கு
கோனவன் கரம் நீட்டி வானுலகையளிப்பான்
No comments:
Post a Comment