Saturday, 26 March 2022

சிம்மாசனந்தனில்……


अभिरामिस्तोत्रम्

नमस्ते ललिते देवि श्रीमत्सिंहासनेश्वरि । भक्तानामिष्टदे मातः अभिरामि नमोऽस्तुते ॥ १॥ चन्द्रोदयं कृतवती ताटङ्केन महेश्वरि । आयुर्देहि जगन्मातः अभिरामि नमोऽस्तुते ॥ २॥ सुधाघटेशश्रीकान्ते शरणागतवत्सले । आरोग्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ३॥ कल्याणि मङ्गलं देहि जगन्मङ्गलकारिणि । ऐश्वर्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ४॥ चन्द्रमण्डलमध्यस्थे महात्रिपुरसुन्दरि । श्रीचक्रराजनिलये अभिरामि नमोऽस्तुते ॥ ५॥ राजीवलोचने पूर्णे पूर्णचन्द्रविधायिनि । सौभाग्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ६॥ गणेशस्कन्दजननि वेदरूपे धनेश्वरि । विद्यां च देहि मे कीर्तिमभिरामि नमोऽस्तुते ॥ ७॥ सुवासिनीप्रिये मातः सौमाङ्गल्यविवर्धिनी । माङ्गल्यं देहि मे नित्यमभिरामि नमोऽस्तुते ॥ ८॥ मार्कण्डेय महाभक्त सुब्रह्मण्य सुपूजिते । श्रीराजराजेश्वरी त्वं ह्यभिरामि नमोऽस्तुते ॥ ९॥ सान्निध्यं कुरु कल्याणी मम पूजागृहे शुभे । बिम्बे दीपे तथा पुष्पे हरिद्राकुङ्कुमे मम ॥ १०॥ अभिराम्या इदं स्तोत्रं यः पठेच्छक्तिसन्निधौ । आयुर्बलं यशो वर्चो मङ्गलं च भवेत्सुखम् ॥ ११॥ इति अभिरामिस्तोत्रं सम्पूर्णम् ।



 திருக்கடையூர் கும்பாபிஷேகம் ஸ்பெஷல் ! ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம்நமஸ்தே லலிதே!

தேவி ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி !

பக்தாநாம் இஷ்டதே ! மாத:

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ரோதயம் க்ருதவதி!

தாடங்கேந , மஹேச்வரி

ஆயுர் தேஹி ஜகத்மாத:

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

ஸுதாகடேச ஸ்ரீ காந்தே! சரணாகதவத்ஸலே .

ஆரோக்யம் தேஹிமே நித்யம்

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

கல்யாணி! மங்களம் - தேஹி, ஜகந்மங்கள் காரிணி!

ஐச்வர்யம் தேஹி-மே, நித்யம்.

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ர மண்டலமத்யஸ்தே! மஹாத்ரிபுரஸுந்தரி!

ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

ராஜீவலோசனே, பூர்ணே!

 பூர்ண சந்த்ரவிதாயினி!

ஸௌபாக்யம் தேஹிமே நித்யம்.

 ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

கணேசஸ்கந்த ஜநநி! 

வேதரூபே! தனேச்வரி!

வித்யாம் ச தேஹி மே கீர்த்திம்

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

ஸுவாஸி நீப்ரியே மாத: ஸௌமங்கல்ய விவர்த்தினி!

மாங்கல்யம், தேஹிமே நித்யம்

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

மார்க்கண்டேய மஹாபக்த ஸுப்ரஹ்மண்ய ஸுபூஜிதே.

ஸ்ரீ ராஜராஜேச்வரீ த்வம்ஹி!

ஸ்ரீ அபிராமி! நமோஸ்து -தே.

ஸாந்நித்யம் குரு கல்யாணி 

மம பூஜா க்ருஹே சுபே

பிம்பே தீபே ததா புஷ்பே

ஹரித்ரா குங்குமே மம

ஸ்ரீ அபிராம்யா இதம்

ஸ்தோத்ரம் 

ய: படேத் சக்திஸந்நிதௌ

ஆயுர் பலம் யசோ வர்ச்சோ 

மங்களம் ச பவேத் ஸுகம்

ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! 

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! 

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

 தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!

ஸ்ரீ அபிராமியன்னையின் இந்ததுதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே!


                                   சிம்மாசனந்தனில்……


                                             பல்லவி

                             சிம்மாசனந்தனிலமர்ந்திருப்பவளே  ( கனக )                           

                             அம்பிகையே லலிதே உனையே துதித்தேன்

                                           அனுபல்லவி

                             இம்மாநிலம் போற்றும் கேசவன் சோதரி

                             அம்மா அபிராமி மலர்ப் பதம் பணிந்தேன்

                                                சரணம்

                             காதணியெறிந்து முழுநிலவு காட்டிய

                             மாதரசே நீண்ட ஆயுள் தருபவளே

                             தீதிலா உனதடியார் வேண்டும் வரமளிப்பவளே

                             யாதுமானவளே உனை நமஸ்கரித்தேன்      


                             அமுதகடேச்வரின் இடமமர்ந்தவளே      

                             உமையுனைப் பணிந்தோர்க்கு நலமருள்பவளே

                             நமஸ்கரிக்குமென் பிணியிடர் களைந்தருள்வாய்

                             கமலகரத்தாளே  உனையே வணங்கினேன்

        

                             மங்களம் தருபவளே  மாதேவி கல்யாணி

                             சங்கடமிடர் களையும் அங்கயற்கண்ணியே

                             தங்கும் பொருள் தந்து ஆண்டருள்வாயே

                             பொங்கரவணி புனைந்த உனதடி பணிந்தேன்   

   

                             சந்திரமண்டலத்தின் நடுவிலமர்ந்தவளே

                             சந்திரசேகரியே மந்திரப்பொருளே

                             மகா திரிபுரசுந்தரியும் நீயே 

                             ஶ்ரீ சக்ரராஜ சிம்மாசனேச்வரியே


                             தாமரையைப் பழிக்குமழகு விழியுடையவளே

                             கோமளவல்லியே  முழுமையானவளே

                             காமனைக் காத்தவளே பூரண நிலவே

                             பாமரனெனக்கருளும் தாயேயுனைப் பணிந்தேன்


                             கந்தன் கணபதியை ஈன்ற அன்னையே

                             மந்திர வேத வடிவானவளே

                             எந்தனுக்குக் கீர்த்தியும் செல்வமுமளிப்பவளே

                             உந்தனரவிந்த மலரடியே பணிந்தேன்


                             சுவாசினிகள் துதித்திடுமீச்வரியே

                             சுமங்கலிக்கருளும் கமலாம்பிகையே

                             மங்கலமருள்வாயே மலைமகளே தாயே

                             எங்கும் நிறைந்தவளே அபிராமியுனைப் பணிந்தேன் 

                                    

                            தூய பக்தர் சுப்பிரமணியனெனும்

                            நேய மிகு அபிராம பட்டருடன் கூட

                            சேயென மார்க்கண்டேயரும் வணங்கிடும்

                            தாயே ராஜேச்வரியுனையே பணிந்தேன்


                            மங்களமேயுனை வழிபடுமறையிலுள்ள

                            குங்குமம்,தீபம்,மலர்களுடனுன் படமுமும்

                            மங்கலம் நிறைந்ததாய் ச்செய்திட வேண்டியே

                            சங்கரியுன் பதம் பணிந்தேனருள் புரிவாய்


                            அபிரமியுனைப்போற்றும் இத்துதி சொல்வோர்க்கு

                            ஆயுளாரோக்கியம் கீர்த்தி நற்கதி

                            சகல சௌபாக்கியமும் கிடைத்திட வேண்டுமென

                            உனையே வேண்டியுன் மலர்ப் பதம் பணிந்தேன்                                                          

                                                                                     

                             

          

                                  

                             

               

                             


                              

  

                         

                                           

                                                                  


No comments:

Post a Comment