தாமரைப் பூ போன்ற உன் பாதத்தை சரணாகதி அடைந்தால் போதும் ....
தாயே மகமாயி ......
பிறவிப் பிணியைத் தீர்ப்பதற்கு
அதுவே மருந்தாகும்......
சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:
தாயே மகமாயி…..
பல்லவி
தாயே மகமாயி நீயே பராசக்தி
ஓயாதுனைத்துதித்தேன் நீயேயெனக்கருள்வாய்
அனுல்லவி
மாயே மகாசக்தி கேசவன் சோதரி
தேயாத புகழ் மேவும் சமயபுரத்தாளே
சரணம்
சீதளா தேவியே உலகநாயகியே
மாதாவும் நீயே பிதாவும் நீயே
ஆதரவளித்தெமைக் காப்பவள் நீயே
பாதாரவிந்தம் பணிந்திடும் எமக்கருள்வாய்
No comments:
Post a Comment