கவீந்திர ஹ்ருதயேசரீ பரிக்ருஹீத காஞ்சிபுரீ
நிரூட கருணா ஜரீ நிகில லோக ரக்ஷாகரீ|
மன: பததவீயஸீ மதன சாஸன ப்ரேயஸீ
மஹாகுண கரியஸீ மம த்ருசோSஸ்து நேதீயஸீ ||
ஆதி சங்கரர் போன்ற சிறந்த ஞானிகளின் மனதில் நடமாடு கின்றவளும், காஞ்சியைத்த் தன் வாசஸ்தலமக. கொண்டவளும் கருணா வாரிதியான வளும் , லோக ரக்ஷணம் செய்பவளும், நம் மனதால் எட்டமுடியாதவளும், மிக்க கீர்த்தி உடையவளும், மன்மதனை வெற்றி கொண்ட ஈசனுக்குத் துணைவியும், நற்குணங்களே நிறைந்தவளுமான அன்ன ஸ்ரீகாமாட்சி தேவி நம் கண்களில் எப்போதும் இருக்க வேண்டும் ! இது ஒரு அழகான ப்ரார்த்தனை! இதை தினமும் சொல்லி வந்தால் தேவி கண முன் தோன்றுவாள்!
காஞ்சிபுரம்….
பல்லவி
காஞ்சிபுரம் வளர் காமாக்ஷியைப் பணிந்தேன்
வாஞ்சையுடன் எனக்கருள வேண்டுமெனத் துதித்து
அனுபல்லவி
தீஞ்சுவை மொழி பேசும் கேசவன் சோதரியை
மாஞ்செடி கீழமர்ந்து தவம் செய்த ஈச்வரியை
சரணம்
கவிகள் ஞானிகள் மனத்திலிருப்பவளை
கருணைக் கடலை அனைத்துலகும் காப்பவளை
மனம் வாக்குக்கெட்டாத கீர்த்தி உடையவளை
காமனைக்காய்ந்த ஈசன் துணைவியை
No comments:
Post a Comment