சந்திரனொளியில்….
பல்லவி
சந்திரனொளியிலுன் திருமுகம் கண்டேன்
சுந்தரி உந்தன் மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
நந்தகோபன் மகன் கேசவன் சோதரி
சந்திரசேகரன் பங்கிலுறைபவளே
சரணம்
கந்தங்கமழும் பூங்குழலாளே
பந்தார் விரலியே பர்வத குமாரியே
மந்திரப் பொருளே மறை போற்றும் திருவே
எந்தன் குறை தீர்த்தெனையாண்டருள்வாயே
No comments:
Post a Comment