ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே
ஹே காமாக்ஷி! நமஸ்கரிக்கின்றவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்யை,அளவற்றகீர்த்தி, நல்ல புத்ரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை இவைகளைச் சீக்கிரமாகவே கொடுக்கிறது. ஹே த்ரிபுர ஸம்ஹாரம் செய்த பரமேச்வரரின் ப்ரிய பத்தினியே! பக்தர்களின் பாபத்தை போக்குகிற தங்கள் சரணத்தில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் கொடாது!
श्रियं विद्यां दद्याज्जननि नमतां कीर्तिममितां
सुपुत्रान् प्रादत्ते तव झटिति कामाक्षि करुणा ।
त्रिलोक्यामाधिक्यं त्रिपुरपरिपन्थिप्रणयिनि
प्रणामस्त्वत्पादे शमितदुरिते किं न कुरुते ॥
தாயே காமாக்ஷி…..
பல்லவி
தாயே காமாக்ஷியுனைத் துதிப்பவர்க்கெல்லாம்
நீயேயவர் நினையாத நலன்களை அளிப்பவளே
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் சோதரி
சேயெனையும் நீ மனங்கனிந்தாதரி
சரணம்
கல்வி செல்வம் புத்ர சந்தானம்
நல்வாழ்வனைத்துடனே இன்னும்
மூவுலகாளும் கீர்த்தியும் புகழும்
சொல்லவொண்ணாத அனைத்துமருளும்
No comments:
Post a Comment