கமல மலரிதழைக்…..
பல்லவி
கமல மலரிதழைக் கண்களாய் வைத்திருக்கும்
இமவான் மகளே மீனாக்ஷி எனக்கருள்வாய்
அனுபல்லவி
நமச்சிவாயனின் இடப்புறமமர்ந்தவளே
அமரர் முனிவர் பணி கேசவன் சோதரி
சரணம்
குமரனுக்கு வேல் தந்த வேல் நெடுங்கண்ணியே
சமரம் புரிந்து பண்டனையழித்தவளே
உமா மகேச்வரி ராஜராஜேச்வரி
சாமகானம் தனில் மனம் மயங்குமீச்வரி
சமமெனத் தனக்கொருவர் இல்லாத தேவி
சுமையோ நானுனக்கு எனக்கருள தயக்கமென்ன
ரமா சரச்வதி கவரி வீசிட
ஶ்ரீநகரந்தனில் வீற்றிருப்பவளே
No comments:
Post a Comment