வினை தீர்க்கும் கணபதியின் திருநாமங்கள் !
ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் - யானைக்காது உடையவன்
லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்
விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்
விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது - தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் - யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்.
கஜமுக பாத நமஸ்தே !!!!
பலப்பலப் பெயர்….
பல்லவி
பலப்பலப் பெயர் சொல்லி உனையழைத்தேனே
நலமருள்வாயே ஆனை முகத்தோனே
அனுபல்லவி
மலர் நாபன் கேசவன் மருகனே கரிமுகனே
உலகிலனைவரும் முதல் துதிக்கும் தெய்வமே
சரணம்
தலங்களனைத்திலும் எழுந்தருளிக் காட்சிதரும்
வலம்புரி கணபதியே இடர் துயர் களைபவனே
குலம் கல்வி செல்வம் நல்வாழ்வனைத்தும்
நலமுடனளித்திடும் வேழமுகத்தோனே
வளைந்த துதிக்கையுடைய வக்ர துண்டனே
களைதரும் மதியணிந்த பால சந்திரனே
இளையவன் பெயர் சேர்ந்த கந்தசோதரனே
சளைக்காமலடியார்க்கு நலமளிப்பவனே
அழகிய மங்கள முகமுடைய சுமுகனே
இழந்த ஒரு கொம்புடைய ஒற்றைக்கொம்பனே
மழலையர் விரும்பும் விகட விநாயகனே
குழகன் சிவன் மகனே சூர்ப்பகர்ணனே
தடைகளையுடைத்திடும் விக்நேச்வரனே
தன்னிகரில்லாத விநாயகனே
சுடரொளி புகைதரும் தூமகேதுவே
பழுப்பு நிறமுடைய கபில வர்ணனே
கரமைந்துடையவனே ஐங்கரனே
வரந்தருபவனே வாரணமுகனே
பெரு வயிறு படைத்தோனே லம்பாதரனே
கணங்களின் தலைவனே கணநாயகனே
No comments:
Post a Comment