பார்த்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
வணங்கிடுவோம்….
பல்லவி
வணங்கிடுவோமன்னை மலரடிதனையே
கணமுமவளை மறவாத மனம் வேண்டி
அனுபல்லவி
கிணத்துத் தவளையாயில்லாமல் வாழ்வில்
சுணக்கமின்றிப் பறக்கும் பறவையாய்த் தோன்றி
சரணம்
பணம் பதவி புகழெதுவும் தேடி அலையாமல்
குணம் கல்வி நல்வாழ்வு நல்லதையே நாடி
இணக்கமுடனனைவருக்கும் நன்மைகள் செய்து
அணங்கவளின் நாமமே அனுதினம் துதித்து
பிணங்கிய வள்ளியை முருனுக்கு மணமுடித்த
கணநாதனன்னை கேசவன் சோதரி
துணையிருக்குமீசன் இடம் கொண்ட நாயகி
தணலேந்தும் நெற்றிக் கண்ணுடைய ஈச்வரி
No comments:
Post a Comment