சுடர் அரங்கப்பெருமானின்
சோதரியே வயிணவியே
படர்அரங்கக் காவிரியாள் பாய்ந்தோடும் நாட்டினளே
உடல்அரங்கக் கூட்டிலுறை ஓங்கார மணிக்கிளியே
மடல் அரங்கச் சமயபுர
மாமயிலே, காத்தருளே.
பன்னக பூஷணியே…
பல்லவி
பன்னக பூஷணியே சமயபுரத்தாளே
நன்னலம் பெற வேண்டி உன்னையே துதித்தேன்
அனுபல்லவி
மன்னு புகழ்க் காவிரி பாய்ந்தோடும் நாட்டினளே
தென்னரங்கன் கூட்டிலுறை ஓங்கார மணிக்கிளியே
சரணம்
பொன்னரங்கன் போற்றும் மாமயிலே வைணவியே
சென்ன கேசவன் சோதரியே மரகதமே
புன்னகை முகத்தாளே புவி போற்றுமீச்வரியே
உன்னருள் தந்தெனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment