தேவி மஹாத்மியம் !
ஹேது: ஸமஸ்த-ஜகதாம் த்ரிகுணாபி தோஷைர்ந ஜ்ஞாயஸே ஹரிஹராதிபி-ரப்யபரா
ஸ்ர்வாச்ரயாகில-மிதம் ஜகதம்சபூத-மல்யாக்ருதா ஹி பரமா பரக்ருதி ஸ்த்வமாத்யா !
பொருள் : உலகனைத்துக்கும் காரணம் நீ ; முக்குண வடிவங்கள் உடையவளானாலும் குணத்வேஷம் இல்லாதவள் நீ ; ஹரி-ஹரன் போன்ற தேவர்களுக்கும் எட்டாதவள் நீ;எல்லோருக்கும் புகலிடம் நீ ; உலகெலாம் தோன்றியது உன்னுடைய அம்சத்தால் ; முதன்மையானதும், மாறாததும், உயர்ந்ததுமான மூலப் பிரகிருதி நீ ! . Picture Couryesy ! Kilambakkam Sri Lalitha Maha Tripura Sundari Temple !
அனைத்தும் நீயே….
பல்லவி
அனைத்தும் நீயே ஶ்ரீ லலிதாம்பிகையே
உனையன்றி வேறு யார் எனக்கருள் புரிவார்
அனுபல்லவி
நினைப்பவர்க்கருளும் கேசவன் சோதரி
வினைப்பயனனைத்தும் களைபவள் நீயே
சரணம்
அரனயனரிக்கும் எட்டாத பரம்பொருளே
முக்குணவடிவெனினும் குணமில்லாதவளே
புவனங்களைப் படைத்துக்காத்திடுமீச்வரியே
புகலிடம் நீயே தாயே மகா மாயே
No comments:
Post a Comment