அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........
कालाञ्जनं च तव देवि निरीक्षणं च
कामाक्षि साम्यसरणिं समुपैति कान्त्या ।
निश्शेषनेत्रसुलभं जगतीषु पूर्व-
मन्यत्त्रिनेत्रसुलभं तुहिनाद्रिकन्ये ॥36॥
காலாஞ்ஜனம் ச தவதேவி நிரீக்ஷணம் ச
காமாக்ஷி ஸாம்யஸரணிம் ஸமுபைதி காந்த்யா |
நிஶ்ஶேஷ நேத்ர ஸுலபம் ஜகதீஷு பூர்வ-
மன்யத் த்ரிநேத்ர ஸுலபம் துஹினாத்ரி கன்யே ||36||
- கடாக்ஷ சதகம்.
ஹிமவானுடைய பெண்ணாகிய ஹே தேவி! காமாக்ஷி ! கருப்புமையும், உனது பார்வையும் காந்தியால் சமமாயிருக்கின்றன. ஆனால், கருப்புமையானது உலகில் அனைவரது நேத்ரங்களுக்கும் ஸுலபமாய் கிடைக்கக் கூடியது.உனது கடாக்ஷமோ முக்கண்ணனுடைய பரமசிவனுக்கு மட்டும் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது!
கருணைக்கடலே…..
பல்லவி
கருணைக் கடலே காமாக்ஷி
திருவடி பணிந்தேன் அருள் புரிவாயே
அனுபல்லவி
பெருமைக்குரிய இமவான் மகளே
இருவினைப் பயன் களையும் கேசவன் சோதரி
சரணம்
கருநிற விழியின் கடைக்கண்ணொளியும்
கருப்பு மையும் ஒரு போல இருப்பினும்
கருமை எளிதில் கிடைத்திடுமானாலுன்
கடைக்கண்ணொளியோ சிவனுக்கு மட்டுமே
No comments:
Post a Comment