நாதவடிவானவனை….
பல்லவி
நாத வடிவானவனை நமச்சிவாயனை
பாதம் பணிந்து பாடிப் பரவினேன்
துரிதம்
சுரபதி ரதிபதி கணங்களின் அதிபதி
சரச்வதியின் பதி துதிக்கும் பசுபதியை
அனுபல்லவி
சீதக்கடல் துயிலும் கேசவன் நேசனை
மாதொரு பாகனை மங்கை பங்கனை
சரணம்
கீதங்களிசைத்திடுமேழு ஸ்வரங்கள்
சரிகமபதநி யாதுமவனே
வேத முதல்வன் விடமுண்ட கண்டன்
பாதி மதியணிந்த ஜோதி மயமானவன்
No comments:
Post a Comment