கற்பகமே…..
பல்லவி
கற்பகமே மயிலை அற்புதமே துதித்தேன்
அற்பனெனைக் காக்கத் தருணமிதுவே
அனுபல்லவி
தற்பரன் சிவனின் இடம் கொண்ட நாயகியே
பற்பலரும் பணியும் கேசவன் சோதரி
சரணம்
விற்பன்னர் வேத சாத்திர நிபுணர் போற்றும்
மற்பொருள் நீயே மறை புகழ் மாயே
கற்பனைக் கெட்டாத அழகே ஆனந்தமே
நற்கதி பெறவே நாளுமுனைப் பணிந்தேன்
No comments:
Post a Comment