அரவிந்த பதம்…..
பல்லவி
அரவிந்த பதம் பணிந்தேன் உமா மகேச்வரியே
புரமெரித்த பரமன் இடம் கொண்ட நாயகியே
துரிதம்
நரர் சுரரிந்திரன் சுகசனகாதியர்
அரனயனரியும் கரம்பணிந்தேத்துமுன்
அனுபல்லவி
கரன் முரன் சிரம் கொய்த கேசவன் சோதரியே
சரவணன் கணபதி வணங்கிடும் தாயே
சரணம்
சரச்வதியும் திருமகளும் இருபுறம் கவரிவீச
வரந்தரும் கரமுமபயகரமும் காட்டும்
பரமேச்வரியே அரவணிந்தவளே
சரணடைந்தோரைக் காத்திடுமீச்வரியே
பரமேச்வரனைக் கயிலாயவாசனைக்
கரம் பிடித்தவளே மலையரசன் மகளே
சரி நிகர் சமானமெவருமில்லாதவளே
ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment