அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .....
உத்வேல்லித ஸ்தபகிதைர் லலிதைர் விலாஸை:
உத்தாய தேவி தவ காடகடாக்ஷகுஞ்ஜாத் |
தூரம் பலாயயது மோஹ ம்ருகீகுலம் மே
காமாக்ஷி ஸ்தவரமனுக்ரஹ கேஸரீந்த்ர: ||30|| - கடாக்ஷ சதகம்.
காமாக்ஷி தேவியே! உனது அநுக்ரஹமாகிற பெருஞ்சிங்கமானது பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு, அழகிய சேஷ்டையோடு உனது கடாக்ஷமாகிற அடர்ந்த புதரிலிருந்து வெளிவந்து, என்னுடைய அக்ஞானமாகிற மான்கூட்டத்தை விரைவாய் துரத்தி விரட்டட்டும்!
பட அரவணிந்த விடமுண்ட நீலகண்டன்
இடமமர்ந்தவளே காமாக்ஷியுனைத் துதித்தேன்
அனுபல்லவி
கடல் நடுவே பள்ளி கொண்ட கேசவன் சோதரி
கடம்ப வனந்தனில் வீற்றிருப்பவளே
சரணம்
கடைக்கண்ணெனுமடர்ந்த புதரினின்று புறப்பட்டு
பிடரி தனை சிலிர்த்துக்கொண்ட பெருஞ்சிங்கம்
மடமையாமென் மான் கூட்டம்தனை விரட்டித் துரத்திட
உடனருள்வாயென்றே உனதடி பணிந்தேன்
No comments:
Post a Comment