பரிகாசம் ஏனய்யா….
பல்லவி
பரிகாசம் ஏனய்யா ஶ்ரீராமா என் மீது
பரிதாபமாகவே பிறப்பிறப்பிலுழல்கிறேன்
அனுபல்லவி
கரிக்கும் காரிகைக்கும் சபரிக்குமகலிகைக்கும்
பரிவுடனபயமளித்த கேசவனே
சரணம்
திரிந்தலைந்தேன் உலகில் தீவினைகள் பலப்பல
தெரியாமல் புரிந்தேன் அறிந்து தெளிந்த பின்னே
கிரிதரனே உந்தன் திருவடியே பணிந்தேன்
துரிதமுடன் வந்து எனக்கருள வேண்டினேன்
No comments:
Post a Comment