कामारिकामां कमलासनस्थां
काम्यप्रदां कङ्कणचूडहस्तां ।
काञ्चीनिवासां कनकप्रभासां
कामाक्षिदेवीं कलयामि चित्ते ॥
காமாரிகாமாம் கமலாஸனஸ்த்தாம்
காம்யப்ரதாம் கங்கணசூடஹஸ்தாம் |
காஞ்சீநிவாஸாம் கனகப்ரபாஸாம்
காமாக்ஷீதேவீம் கலயாமி சித்தே ||
மன்மதனுக்கு எதிரியான சிவபெருமானுக்கு பிரியமானவளும்,தாமரைப்பூவில் அமர்ந்தவளும்,பக்தர்களின் அனைத்து
விருப்பங்களையும் நிறைவேற்றுபவளையும்,
வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட கைகளை உடையளும்,காஞ்சிபுரத்தில் வாழ்பவளும்,பொன்போன்று பிரகாசிப்பவளுமான காமாக்ஷி தேவியை எப்பொழுதும் என்மனதில் தியானிக்கிறேன்.
களையான…….
பல்லவி
களையான முகமுடைய காஞ்சீபுர நாயகியை
வளையணிந்த கரமுடைய காமாக்ஷியைப் பணிந்தேன்
அனுபல்லவி
தளைகளைக் களையும் கேசவன் சோதரியை
இளைத்து சிறுத்த இடுப்புடையவளை
சரணம்
காமனின் எதிரியாம் சிவன் மனங்கவர்ந்தவளை
தாமரைப் பூவிலமர் காமேச்வரியை
நாமங்கள் துதித்திடுமடியார்க்கருள்பவளை
கோமளவல்லியைத் தங்க நிறத்தாளை
No comments:
Post a Comment