வாகீஶ்வரீ ஸஹசரீ நியமேன லக்ஷ்மீ:
ப்ரூவல்லரீ வஶகரீ புவனானி கேஹம் |
ரூபம் த்ரிலோக நயனாம்ருதம் அம்ப தேஷாம்
காமாக்ஷி யேஷு தவ வீக்ஷண பாரதந்த்ரீ ||27||
वागीश्वरी सहचरी नियमेन लक्ष्मीः
भ्रूवल्लरीवशकरी भुवनानि गेहम् ।
रूपं त्रिलोकनयनामृतमम्ब तेषां
कामाक्षि येषु तव वीक्षणपारतन्त्री ॥
கடாக்ஷ சதகம்.
அம்பிகே! காமாக்ஷி! எவரிடம் உனது கடாக்ஷமானது ஏற்படுகிறதோ, அவர்களுக்கு கலைமகள் தோழியாகிறாள்; திருமகள் அவர்களது கண் ஜாடையை அநுஸரித்து நடப்பவளாக அவர்களுக்கு வசப்படுகிறாள்; ஈரேழுலகும் அவர்கள் இருப்பிடமாகிறது; அவர்களுடைய ரூபமானது மூவுலகினரின் கண்களுக்கு அம்ருதமாகவும் ஏற்படுகிறது.
நலமனைத்துமருளும்……
பல்லவி
நலமனைத்துமருளும் காமாக்ஷி தேவியுன்
மலர்ப் பதம் பணிந்தேனுன்னருள் பெற வேண்டி
அனுபல்லவி
தலங்களில் சிறந்த காஞ்சி மாநர் வளர்
கலங்கரை விளக்கமே கேசவன் சோதரி
சரணம்
கலைமகள் நேசமுடனருளைப் பொழிகிறாள்
அலைமகளனைத்து நலன்களும் தருகிறாள்
உலகேழும் புகழோங்க அமுதமயாமாய் த்திகழ்கிறார்
மலைமகளே உன் கடைவிழியருள் பெற்றோர்
No comments:
Post a Comment