ஆடிக்களைத்துவிட்டேன்….
பல்லவி
ஆடிக்களைத்துவிட்டேன் அம்மா இனி என்னால்
ஆட முடியாதெனவே உனை நாடி வந்தேன்
துரிதம்
நாடகம் ஆடிடும் நாயகி நீயே
என்னையும் நாடகம் ஆட வைத்தாயே
அனுபல்லவி
தேடிக் கண்டு கொண்டேன் உன்னையல்லால் வேறு
தெய்மிப்புவியிலில்லை கேசவன் சோதரி
சரணம்
பாடிப் பரவசித்தேன் தாயே லலிதாம்பிகையே
ஆடிய பாதனிடமமர்ந்த ஆரணங்கே
ஆடினது போதுமென்று ஓடிவந்து ஓய்வளிக்க
ஈடிணையில்லாத உனையன்றி எவருமில்லை
No comments:
Post a Comment