Friday, 18 March 2022

அண்ட சராசரங்களனைத்தும்


चराचरजगन्मयीं सकलहृन्मयीं चिन्मयीं
गुणत्रयमयीं जगत्त्रयमयीं त्रिधामामयीम् ।
परापरमयीं सदा दशदिशां निशाहर्मयीं
परां सततसन्मयीं मनसि चिन्मयीं शीलये ॥97॥


 சராசர ஜகன்மயீம் ஸகலஹ்ருன் மயீம் சின்மயீம் 

குணத்ரயமயம் ஜகத்- த்ரயமயம் த்ரிதாமா மயீம் பராபரமயீம் ஸதா தசதி சாம் நிசாஹர் மயீம் 

பராம் ஸததஸ்ன்மயீ  ம் மனஸி காமகோடீம் பஜே ||

ஸ்துதி சதகத்திலே 97வது ஸ்லோகம் இது. ஸ்தாவர ஜங்கமம் என அறியப்படும் அசையும் அசையாப் பொருள்கள் யாவையும் தேவியின் ஸ்வரூபமே ! தமஸ், ரஜஸ் ஸாத்வீக என்ற முக்குணங்களும் அவளே ! பூமி, ஆகாயம்,ஸ்வர்கம் என்கிற மூன்று உலகங்களாகவும், சந்திரன்  சூரியன், அக்னி  என்ற மூன்று ஒளி ரூபமாகவும் , பரம், அபரம் என்ற பிரம்ம ஸ்வரோபினியாகவும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென் மேற்குதென் கிழக்கு ஆகிய எண் திசைகளாகவும் வடகிழக்கு வட மேற்கு ஆகிய எண் திசைகளாகவும், இந்திரன், அக்னி யமன், நிருதி, வருணன் வாயு, குபேரன், ஈசானநன் என்கின்ற அஷ்டதிக் பாளர்களாகவும், மேல் , அந்தரிக்ஷம், பூமி ஆக அஷ்டதிக் பாலர்களாகவும், இரவு பகல், காலமாகவும், காலத்தைக் கடந்தும் அதாவது காலத்தைக் கடந்தவளாக காலாதீதா குணாதீதா என்று சஹஸ்ர நாமத்தில் வர்ணிக்குமாபோல் விளங்குகிறாள் ! ஸத்  என்ற சிவ ஸ்வரூபமாகவும், சித் என்ற அம்பாள் ஸ்வரோபமாகவும் இரண்டும் கலந்த சச்சிதானந்த சுவாரூபமாகவும் விளங்குகிறாள் ! அப்படிப்பட்ட அன்னையை மனதில் இருத்தி வழிபடுவோம்!

Oh goddess   who pervades the world of moving and non moving beings   who is in the  hearts of all , who is filled with divinity,
Who has the three  characters(SAtva, Rajas and thamas)  , who pervades  in all three  worlds , who is sun,moon and fire,
Who is here   and in other world  , who pervades in all   the ten directions as day and night  ,
And who is forever  divine  true form  , sing about  you in my mind as Kamakoti.

      
                                            அண்ட சராசரங்களனைத்தும்……


                                                           பல்லவி

                                           அண்ட சராசரங்களனைத்தும் நீயே
                                           கண்மணியே காமகோடி காமாக்ஷி 

                                                          அனுபல்லவி

                                           தண்டனிட்டுப் பணிந்தேன் கேசவன் சோதரி
                                           தண்மதி பிறையணிந்த திரிபுரசுந்தரியே

                                                           சரணம்

                                           எண்திசைப் பொருளாயிருப்பவள் நீயே
                                           எண்திசைப்பாலரை ஆட்டுவிப்பவளே
                                           மண் மீதறியும் மூவுலகுமாளும்
                                           பெண்ணரசே முக்குண நாயகியே தாயே
                                           
                                           எண்ணத்திலுதிக்கும் சச்சிதானந்தமே
                                           கண் கவர் பேரழகே அப்பாலுக்கப்பாலே
                                           விண் மண் காற்று நீர் நெருப்பு நீயே
                                           பண்ணிசைத்துப்பாடி உனையே துதித்தேன்

                                           
                                           
                                           

No comments:

Post a Comment