பிறக்க வைத்தாய்... பிறந்தோம்... வளர வைத்தாய்... வளர்ந்தோம்...
வாழ வைக்கிறாய் ... வாழ்கிறோம்... இறக்க வைக்கிறாய்... இறக்கிறோம் ...
இழப்புகள் தாங்கியும்.... வாழ... துணை நிற்கிறாய் ....
நன்றியுடன் இருப்போம்... உன்னிடம் முருகய்யா...!
இப்பிறவி…….
பல்லவி
இப்பிறவி தந்தெனை உலகில் உலவ விட்டாய்
சுப்பிரமணியனே நன்றியுடனுனைத் துதித்தேன்
அனுபல்லவி
ஒப்பிலா மணியே கேசவன் மருகனே
கப்பிய கரிமுகன் சோதரனே குமரா
சரணம்
வாழ வைத்தவனும் வளரச்செய்தவனும்
கோழிக் கொடியோன் நீயே முருகா
ஏழையேன் இழப்பதும் பிழைப்பதுமுன்னாலே
தாழ்மையுடனுனது தாள் பணிந்தேன் கந்தா
No comments:
Post a Comment