கதி அற்றவரை ...
நிர்க்கதி ஆக்காமல்....
நற்கதி தரும் நாராயணா...
சரணம் உன் மயிலிறகு பாதங்கள்...!
கதியற்றவரை…..
பல்லவி
கதியற்றவரை நிற்கதியாய்ச் செய்யாத
மதிமுகத்தானைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
துதித்த கரிக்கும் காரிகைக்குமபயம் தந்த
சதுர்புஜனை நர நாராயணனை
சரணம்
எதிர்த்திடுமரக்கரைக் கொன்றழித்தவனை
நிதி தரும் திருமகளை மார்பினில் வைத்திருப்பவனை
அதிசயங்கள் பல நிகழ்த்திய மாலனை
கதியவன் மயிலிறகுப் பதமெனப் பணிந்தேன்
No comments:
Post a Comment