*🙏 ஸ்ரீ ஸிவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்🙏*
*தேஜாஸாமபி யத்தேஜஸ்*
*தபஸாமபி யந்தப:*
*ஸாந்தா நாமபிய: ஸாந்த:*
*த்யுதீநாமபி யாத்யுதி: 26.*
( அவர் தேஜஸ் உடைய எல்லாவற்றையும் விட மிகுந்த தேஜஸ் உடையவர்
அவர் சக்திகளை எல்லாம் விட பெரிய சக்தி வாய்ந்தவர்
அவர் சாந்தம் உடையவர்களை விட சாந்தம் உடையவர்
அனைத்து விதமான அறிவுகளுக்கும் அவர் சாட்சியாக இருப்பவர் )
சகலமுமவனென….
பல்லவி
சகலமுமவனென சிவனைப் பணிந்தேன்
புகலிடமவனது மலர்ப் பதமென்றே
அனுபல்லவி
இகபர சுகம் தரும் கேசவன் நேசன்
அகிலமனைத்தையுமாள்பவனவனே
சரணம்
அனைத்து ஒளியையும் மிஞ்சும் தேசுடையவன்
தனக்கொரு நிகரிலா சக்தி படைத்தவன்
மனச் சாந்தியளித்திடும் சாந்த சொரூபன்
சனகாதி முனிவருக்கும் அறிவளிக்கும் குரு அவன்
No comments:
Post a Comment