#ஆன்மீகம் முருகனின் பெயர் சிறப்புகள்
1-ஆறுமுகம்: ஆறு குழந்தைகளாகி சரவண பொய்கையில் வளர்கையில் உமை அன்னையால் கட்டி அணைத்ததில் ஆறுமுகங்களுடன் ஓர் உருவம் பெற்றதால், ஆறுமுகம் என அழைக்கப்படுகிறார்
2-கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிவதால், கடம்பன்
3-கந்தன் : பகைவர் வலிமையை அழிப்பவன்
கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன்
4-ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு
திருமேனியும் ஒன்றானவன்.
5-காங்கேயன்: , ஆறு தீப்பொறிகள் கங்கையில் மிதந்து
சரவண பொய்கை யில் சேர்ந்ததால்
கங்கையின் மைந்தன் காங்கேயன்
6-கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால்
வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன்
7-குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில்
கோயில் கொண்டதால் குகன்
நம் மனம் குகை போன்றது. குகை எப்போதும் இருண்டிருக்கும். அந்த இருட்டில் ஜோதியாக
முருகன் தோன்றுவதால் அவனுக்கு குகன் என்பார்
8-குக்குடத்வஜன் : சேவற் கொடியைக் கொண்டதால்
குக்குடத்வஜன், சேவற் கொடியோன்
9-குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும்
உடையவன்
10-குருநாதன்: ப்ரணவ த்தை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன்
11-சரவணபவன்- நாணல் சூழ்ந்த பொய்கையில்
தோன்றியவன்.
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன்
12-விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில்
பிறந்ததால் விசாகன்
ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன்
பலப்பல பெயருடைய……
பல்லவி
பலப்பல பெயருடைய பாலசுப்ரமண்யனை
வலம் வந்து பணிந்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
நலமனைத்து மருளும் கேசவன் மருகனை
மலைகளில் நின்றருளும் தணிகாசலனை
சரணம்
பலம் மிக்க தோளுடைய ஸ்கந்தனை வேலனை
மலைமகள் சிவன் நடுவே அமர்ந்திருக்கும் கந்தனை
சல சலக்கும் கங்கையில் மிதந்த காங்கேயனை
சரவணப் பொய்கையிலுதித்த சரவணனை
கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயனை
கீர்த்தி மிகு குமரனை சேவற்கொடியோனை
நாற்கவிகள் போற்றும் சரவணபவனை
பார் புகழும் விசாகனை மயில்வாகனனை
அரனுக்கு மந்திரப் பொருள் சொன்ன குருபரனை
சரவணபவவெனும் ஆறெழத்து நாயகனை
கரங்களில் வேலேந்தும் வேலாயுதனை
நறுமண மாலை அணிந்த கடம்பனை
முகமாறுடைய ஆறுமுகனை குகனை
சகமெலாம் புகழும் சண்முகநாதனை
இகபர சுகம் தரும் தண்டாயுதபாணியை
சகலரும் போற்றும் சுவாமிநாதனை
No comments:
Post a Comment