எத்தனை இடர்……
பல்லவி
எத்தனை இடர் வரினும் துன்பங்கள் வந்தாலும்
அத்தனைக்கும் துணை நமச்சிவாயமே
அனுபல்லவி
சித்தத்திலந்த சிவன் நாமமே நினைந்து
பொற்றுணைத் திருந்தடியை மனமாரத் துதிப்போர்க்கு
சரணம்
இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாதென
அத்தனை ஊர்களிலும் கோயில் கொண்டிருக்கும்
பித்தனைப் பேயனைக் கேசவன் நேசனை
தத்தமுள்ளங்களில் மனமாரத் துதிப்பவர்க்கு
No comments:
Post a Comment