நாமங்களாயிரம்….
பல்லவி
நாமங்களாயிரம் உடைய ஶ்ரீ லலிதே
தூமலர் தூவி சில பெயர் சொல்லியழைத்தேன்
அனுபல்லவி
காமக்ரோதாதி அறு பகையகலவே
தாமரை நாபன் கேசவன் சோதரியே
சரணம்
ஓமெனும் மந்திரப் பொருளும் நீயே
சாம முதல் வேதங்களனைத்தும் நீயே
காமனுக்கருள் செய்த காமேச்வரியே
காமாரி பங்கிலுறை ஏகாம்ரேச்வரியே
தள்ளாது உடல் தளர்ந்து கண்கள் குழிவிழுந்து
எல்லா அவயவமும் செயலிழக்கும் தருணம் வரை
மெள்ள மட நெஞ்சே நீ காத்திருக்காமல்
உள்ளத்திலிருப்பவளை உணர்ந்து துதித்திடுவாய்
உள்ளத்தில் வைத்துத் துதிப்பவரைக் காப்பவள்
வெளியில் தெரியாத பரம்பொருளுமவளே
வெள்ளமெனக் கருணை மழை பொழிந்திடுமன்னையவள்
அள்ளக்குறையாத அருளளிக்கும் தாயுமவள்
No comments:
Post a Comment