உடல் சோர்வடைந்தால்….
பல்லவி
உடல் சோர்வடைந்தால் பொறுத்திடுவேன் ஶ்ரீராமா
உள்ளம் சோர்வடையால் காப்பதுன் கடனே
அனுபல்லவி
அடலேறு நீயே அகிலம் காப்பவனே
கடல் நடுவே கிடந்துறங்கும் கேசவனும் நீயே
சரணம்
இடம் பொருள் ஏவலறியாத பேதை நான்
மடத்தனமாக அடக்கமில்லாமல்
சடமாய்த் திரிந்து பிழைபல புரிந்தேன்
விடமுண்ட சிவன் புகழ்ந்த உன்நாமம் உரைத்திலேன்
கடல் கடந்து படைநடத்தி ராவணனை வதைத்தவனே
மடந்தை சீதையின் மலர்க்கரம் பிடித்தவனே
புடமிட்ட பொன்னே ரகுகுல தனமே
அடம் பிடிக்காமல் வந்தெனையாட்கொள்வாய்
No comments:
Post a Comment