கொஞ்சிக் கொஞ்சி…..
பல்லவி
கொஞ்சிக் கொஞ்சி நடந்து வா கண்ணா
பிஞ்சுக் காலெடுத்து தண்டைகள் குலுங்கிட
அனுபல்லவி
நஞ்சுண்ட கண்டனும் மலைமகளும் காண
மஞ்சள் பட்டு டுத்தி மேகலை குலுங்கிட
சரணம்
பஞ்சஞ்சு மெல்லடியார் கோபியர்கள் காண
அஞ்சுகம் சரியவுன் தோள் வளைகளாட
கொண்டையில் சூடிய மயில்பீலி அசைந்தாட
நெற்றிச் சுட்டியாட குண்டலங்களாட
துளபக் கௌஸ்துப மாலைகளாட
கச்சையின் கீழுள்ள அரைஞாணாட
பச்சைகல் பதித்த ஆரங்களாட
கையில் வெண்ணெயுருகி ஆட
No comments:
Post a Comment