சரணாகத வத்சலனே…..
பல்லவி
சரணாகத வத்சலனே ஶ்ரீ ராமா
பரம்பொருள் நீயே பரிந்தருள்புரிவாய்
அனுபல்லவி
மரணம் பிறப்பெனும் மாயச்சுழலகல
பரந்தாமா கேசவனே உனையே சரணடைந்தேன்
சரணம்
சரணடைந்த வீடணனை அரியணையில் அமர வைத்தாய்
பரதனுக்கோ உனது பாதுகையை அளித்தாய்
பரமனே அனுமனுக்குன் திருவடி நிழல் தந்தாய்
நர ஜென்மமெடுத்துழலும் எனக்கருள இது தருணம்
No comments:
Post a Comment