வருந்தி….
பல்லவி
வருந்தித் திருந்தியபின் வழக்கென்ன ஶ்ரீ ராமா
பெருமைக்குரிய அயோத்தி மன்னனே
அனுபல்லவி
கருநீலவண்ணனே கேசவனே ரகு ராமா
இருவினையால் யான் படுந்துயர் போக்கிடுவாய்
சரணம்
தரும யுத்தம் வாலியுடன் செய்யவில்லை என்பவர்க்கு
தரும வழியேயவன் நடக்காததாலவன்
கருமவினையால் மாண்டானென்றறிந்தே உன்
திருவடி பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment