நாடித்துதித்தேன்……
பல்லவி
நாடித்துதித்தேன் கோடிலிங்கம்தனை
“ ஈடிணையில்லாத கேசவன் “ நேசனை
துரிதம்
நந்தி கணங்கள் நரர் சுரர் நாரதர்
இந்திரன் நான்முகன் கந்தன் கணபதி
தேவர்கள் முனிவர்கள் சுக சனகாதியர்
வந்தனை புரிந்திடும் சந்திர சூடனை
அனுபல்லவி
பாடிப் பரவசித்தேன் சிவனவன் லீலைகளை
ஓடி வந்து உதவிடுவான் வாடிடுமடியார்க்கு
சரணம்
வேடிக்கையாய் வினையாய் பல செயல்கள் புரிந்து
ஆடிக் களைத்தேன் இந்த அகிலம் தனில் நானும்
ஆடிட இனி என்னால் முடியாதென ஓய்வளிக்க
ஆடிய பாதனவன் அருள் வேண்டி நானும்
No comments:
Post a Comment