#க்ருஷ்ண_ரஸிகா
- ஹரிப்ரியா
என்னை எழுதேன்
என்றொரு குரல் கேட்கிறது.
இதோ வந்தேன் என்று
ஒவ்வொரு சொல்லாய் வந்து
வரிசையில் நின்று
நானும் அவன் புகழுக்கேதானுமாவேன் என்கிறது.
இருள் வானின் விண்மீன்கள்
கண்ணன் உடல் வண்ணத்தால் மிளிர்வதாய் சொல்லிப்போகின்றன.
கல் மரம் மலையென்று
இங்கே தெரியும் எல்லாப் பொருள்களும்
அவன் புகழொலிப்பில்
பங்குபெற விழைகின்றன.
இவ்வுலகம் கண்ணன் புகழொலிகளால் ஆனது..
பாடப்பொருள் தேடி….
பல்லவி
பாடப் பொருள் தேடி அலைந்தேன் கண்ணனெனை
பாடென்றானவனும் சரியென்றேன் நானும்
அனுபல்லவி
ஆடகப் பொன்னந்தக் கேசவன் புகழ்தனையே
பாடப் புகுந்தேன் அவனருளாலே
சரணம்
பாடப் பாட சொல்லும் பொருளும்
கூட வந்தெனை ஆட்கொண்டதென் சொல்ல
நாடும் பொருளனைத்தும் மாயக்கண்ணனே
தேடுமிடமெல்லாம் கண்ணனே தெரிகின்றான்
துரிதம்
கல் மரம் மலையும் விண்மீன்கள் கோள்கள்
எல்லாம் கண்ணனே கண்ணனன்றி வேறில்லை
No comments:
Post a Comment