#முருகன் அருமைத் தம்பி ஞான வேலன் அழகாக வரைந்துள்ள ஆறுமுகநாதர். பார்த்தவுடனே ஒரு பாட்டை எழுதியாச்சு
பல்லவி
கோலமாமயில் ஏறியேவரும் ஆறுமாமுக தேவனே எழிற்
கோவிலாயெனதுள்ளமேகிடும் ஆதியான ப்ரதாபனே
அனுபல்லவி
தேசுபுன்னகை வீசியேவரும் தேவசேனையின்நாதனே உயர்
மாசிலாமணிக் கண்ணில் தோன்றிய மாதுமைமகிழ் மைந்தனே
சரணம்
வேடனாய் ஒரு வில்லையேந்தியே வேழமாமுகன் காணவே
வேடமாதராம் வள்ளியாளை மணந்திருந்த என் தெய்வமே
வேலனாய் அடியார்கள் வெந்துயர் வேதனைகளை தீர்த்துமே
பாலனாய் படைவீடுகள் தனில் சாலமேபுரி நாதனே
நீலமயில் மீதமர்ந்த……
பல்லவி
நீல மயில் மீதமர்ந்த வேலாயுதனை
சீலமுடன் துதித்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
ஆலமுண்ட நீலகண்டன் பாலனை வேலனை
ஞாலம் உண்டுமிழ்ந்த கேசவன் மருகனை
சரணம்
ஏலவார் குழலம்மை பார்வதி மைந்தனை
சோலை மலைக்குறத்தி வள்ளியை மணந்தவனை
காலனும் கலங்கும் வண்ணம் சூரனை வென்று
சீலமுடன் செந்தூர் தலத்தில் கோயில் கொண்ட
No comments:
Post a Comment