சாஸ்வதமில்லா இப்புவி வாழ்வில்சாதகமேதும் செய்திலேன் தாயே
சாஸ்வதமான இமையவளே நின்சரணகமலமதை பற்றியே
சாதகப் பறவையாய் நின்னருட் மழைக்காக சந்ததமும் காத்து நிற்கிறேன்
சந்ததமும் காப்பவளேசடுதியில் வந்தென்னை காத்திடு தாயே
சாம்ப பரமேஸ்வரி சங்கரியே சரணம் சரணம் அம்மா
நிரந்தரமில்லா உலகில்…..
பல்லவி
நிரந்தரமில்லா உலகில் நிரந்தரமானவளே
அறம் வளர்த்த நாயகியே உனையே துதித்தேன்
அனுபல்லவி
அரனயனரி பணியும் கேசவன் சோதரி
பரமசிவன் ஐயாறப்பன் நாயகியே
சரணம்
பறவை சாதகம் போலுன் அருள் மழை வேண்டினேன்
உறவு உனையன்றி வேறில்லையெனக்கு
அறம் தழைக்கும் ஐயாற்றிலுறைபவளே
சரணம் சரணமென சரணம் பணிந்தேன்
No comments:
Post a Comment