அனைத்தும் நீயிட்ட…..
பல்லவி
அனைத்தும் நீயிட்ட பிச்சை அன்னையே
நினைத்து அனுதினம் துதித்தேன் உன்னையே
துரிதம்
தனம் புகழ் கல்வி செல்வம் வீடு
நல்வாழ்வு குலமெனப் பதினாறு பேறு
அனுபல்லவி
எனையாளுமீசன் கேசவன் சோதரி
வினைப்பயன் களைந்திட எனை நீ ஆதரி
சரணம்
தினையளவு உன்னைத் துதித்தாலும் போதும்
பனையளவு பலன் தரும் கற்பக தருவே
முனைப்புடன் வணங்கிடுமடியவர்க்கெல்லாம்
துணையென உடனிருக்கும் ஶ்ரீலலிதாம்பிகையே
No comments:
Post a Comment