பரியேறும் அம்பிகையின்….
பல்லவி
பரியேறும் அம்பிகையின் பதமலர் பணிந்தேன்
திரிபுரசுந்தரியவள் கருணை வேண்டியே
அனுபல்லவி
அரியயனரன் பணியும் கேசவன் சோதரி
பரிவுடனருள் தரும் அகிலாண்டேச்வரி
சரணம்
மரித்தலும் பிறத்தலுமில்லாதொழித்திடும்
அரியதொரு சக்தியை வைத்திருக்குமீச்வரி
பிரியமுடன் சிவபெருமானிடப்பாகமமர்ந்த
பெரிய நாயகி ஆதிபராசக்தி
रक्तामश्वाधिरूढां शशिधरशकलांबद्धमौलिं त्रिनेत्रां ।
पाशेनाबध्य साध्यं स्मरशरविवशां दक्षिणेनानयन्तीं ।
हस्तेनान्येन वेत्रं वरकनकमयं धारयन्तीं मनोज्ञयां ।
देवीं ध्यायेदजस्त्रं कुचभरनमितां दिव्य हाराभिरामां ॥
No comments:
Post a Comment