பலவாறு உனைப் போற்றி…..
பல்லவி
பலவாறு உனைத் துதித்துப் பாடிவிட்டேன் காமாக்ஷி
பலனளிக்க இன்னுமென்ன தயக்கமெனச் சொல்வாயே
அனுபல்லவி
மலைமகளே உமையே கேசவன் சோதரியே
அலகிலா விளையாடல் பல புரிந்த ஈச்வரியே
சரணம்
சுலபாமாயெவருமணுக முடியாத
பலமுடைய திருச்சக்கரத்திலமர்ந்தவளே
நலம் பல நல்கிடும் நாராயணியே
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவளே
புலன்களுக்கெட்டாத மேருவில் வீற்றிருக்கும்
லலிதாம்பிகையே திரிபுரசுந்தரியே
தலங்களுள் சிறந்த காஞ்சி மாநகர் வளர்
குலமகளே தாயே எனக்கருள்வாயே
No comments:
Post a Comment