Wednesday, 14 February 2024

கண்டேன் கேசவனை….

 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருவடிகளே சரணம்...!!!

.வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  

விழுமிய முனிவரர் விழுங்கும்* 

கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* 

குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  

ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*

மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே...!!!


                                           கண்டேன் கேசவனை….

                                                     பல்லவி

                                    கண்டேன் கேசவனைப் பார்த்தசாரதியை

                                    கொண்டேன் ஆனந்தம் அவன் பதம் பணிந்து

                                                   அனுபல்லவி

                                    அண்ட சராசரங்களை ஆண்டருளும்

                                    கண்ணனை ஶ்ரீமன் நாராயணனை

                                                        சரணம்

                                    வேதப் பொருளை வேதத்தின் சுவையை

                                    ஓதுகின்ற முனிவர்கள் காட்டுகின்ற நெறி முறையை

                                    கோதுகின்ற கனியெனச் சுவைத்ததனை         

                                    தீதறத் திருவல்லிக்கேணிப் பதிதனில்                                   

.

    விளக்கம்  

.

எம்பெருமானை ஸாக்ஷாத் வேதமாகச் சொன்னது-

வேத ப்ரதிபாத்யனா யிருக்குந் தன்மைபற்றியாதல், 

வேதங்களை வெளியிட்டருளினமை பற்றியாதல். 

உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் 

ஒவ்வொருவகையாக இருக்குமாதலால் 

அவரவர்களுடைய விருப்பத்திற் கிணங்க 

உபாயங்களையும் பலன்களையும் வேதமூலமாகக்

 காட்டிக் கொடுத்திருக்கின்றமைபற்றி வேதத்தின்

 சுவைப்பயனை எனப்பட்டது. 

.

வ்யாஸர் பராசரர் வால்மீகி முதலிய முனிவர்களுக்கு 

இனிய கனிபோலே மிகவும் போக்யனாயிருப்பது

பற்றி விழுமிய முனிவர் விழுங்குந் கோதிலின் 

கனியை எனப்பட்டது.

No comments:

Post a Comment