துளப ப்ரியனே…..
பல்லவி
துளப ப்ரியனே மாதவா உனது
அளவிலாக் கருணையை அளித்தெனைக் காப்பாய்
அனுபல்லவி
பள பளக்குமழகிய மணி மாலைகளும்
களபமுமணிந்த திருமார்புடையவனே
சரணம்
பிளந்தரக்கன் கேசியின் வாய்கிழித்த கேசவனே
அளகாபரணமாய் மயில் பீலியணிந்தவனே
களவு செய்து வெண்ணையுண்ட வாயனே
இளகிய மனம் படைத்த நாரயணனே
No comments:
Post a Comment